பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது

1

பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உரப்புளி தலையாரி பட்டா மாற்றம் செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நிலையில் கைது செய்யப்பட்டார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு உரப்புளி தலையாரி இராசையா 45, புகார்தாரரிடம் தனக்கும், வி.ஏ.ஓ., ஸ்டாலினுக்கும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர கேட்டுள்ளார்.


லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையின் அறிவுறுத்தலின் பேரில், தாலுகா அலுவலகம் முன்பு, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கிய தலையாரி இராசையாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.


மேலும் ஸ்டாலினுக்கும் இவ்வழக்கில் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

Advertisement