ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை

புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை, நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உள்ளது. அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் அஹமது தாரிக் பட். இவரது தந்தை ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூரில் பிறந்தவர். தாயார் ஸ்ரீநகரை சேர்ந்தவர். 1997 தாரிக் பட், தந்தை, தாயார், சகோதரர், சகோதரி உட்பட 6 பேரும் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு இடம்பெயர்ந்தனர். வேலை காரணமாக தாரிக் அஹமது பட் பெங்களூருவில் உள்ளார். இவர்களிடம் இந்திய பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு உள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் காரணமாக, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அஹமது தாரிக் பட் மற்றும் குடும்பத்தினரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க அட்டாரிவாகா அனுப்பிவைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அஹமது தாரிக் பட் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தங்களிடம் இந்திய ஆவணங்கள் உள்ளன. நாங்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவர்களை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்ததுடன், அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டு உள்ளது.







மேலும்
-
அங்கன்வாடி பணியாளர் காத்திருப்பு போராட்டம்
-
தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கிய தமிழக காவல் துறை: ஐகோர்ட் அதிருப்தி
-
மீனாட்சி திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு; பக்தர்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெறுமா
-
உத்தரகோசமங்கையில் 14 பவுன் நகையை மீட்டுத் தந்த இளைஞர் போலீசார் பாராட்டு
-
தள்ளுவண்டியில் பயறு வியாபாரம் செய்யும் பெண்ணிடம் லஞ்சம் கேட்ட பெண் வி.ஏ.ஓ.,
-
நரிக்குடி அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு