மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி: தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்

20

சென்னை: மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி என தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.


@1brசென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நாளை (மே 3) தொடங்கி 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாடு தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் நடக்க உள்ளது.


இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம், மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார், உளுந்தூர்பேட்டை அருகே ரவுண்டானாவில் விபத்தில் சிக்கியது.


அவரின் கார் மீது மற்றொரு கார் மோதியதே இதற்கு காரணம். விபத்தில் நல்வாய்ப்பாக மதுரை ஆதீனம் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.


இந் நிலையில் தருமபுரம் ஆதீனம் தமது சமூக வலைதள பக்கத்தில் விபத்து திட்டமிட்ட சதி என்று குற்றம்சாட்டி உள்ளார். அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது;


சென்னை வந்துகொண்டிருந்த மதுரையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் காரினை பின்னே வந்து காரில் மோதியுள்ளனர். இது திட்டமிட்ட. சதியாக தெரிகிறது.


இறையருளால் ஆதீனகர்த்தர் உயிர் தப்பினார். காருக்கு சேதமாயிற்று என்ற விபரமறிந்த குருமணிகள் மதுரையாதீனத்துடன் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்தனர்.


இவ்வாறு தருமபுரம் ஆதீனம் கூறி உள்ளார்.

Advertisement