பொறுப்பேற்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் உணவு பாதுகாப்பு அலுவலராக ரவிச்சந்திரன் பணிபுரிந்தார். புதியதாக தேர்வு செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, அவர் அரியலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

கடலுார் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர், நெல்லிக்குப்பத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்யப்பட்டார். இவர், பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் பகுதிகளையும் கூடுதலாக கவனித்ததால் ஒரு இடத்தில் கூட முறையாக பணியாற்ற முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு நிரந்தர உணவு பாதுகாப்பு அலுவலராக மீண்டும் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

Advertisement