சின்ன மாரியம்மன் கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேகம்

புதுச்சத்திரம்: பெரியப்பட்டு சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 4ம் தேதி நடக்கிறது.

பெரியப்பட்டு சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு இன்று ( 2ம் தேதி) காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹுதி தீபாராதனை நடக்கிறது.

நாளை 3ம் தேதி காலை 8.30 மணிக்கு விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை, கோபுர கலசம் பிரதிஷ்டை, பூர்ணாஹுதி தீபாராதனை, மாலை 6.00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, மூலவர் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் நடக்கிறது.

4ம் தேதி காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி, ரக்க்ஷாபந்தனம், தத்துவார்ச்சனை, பூர்ணாஹுதி தீபாராதனை நடக்கிறது. 8:00 மணிக்கு கடம் புறப்பாடு செய்து, 8:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

Advertisement