பெரியாறு பாசன பகுதி வேளாண் மண்டலம் கிராம சபையில் தீர்மானம்
மேலுார்: வலைசேரி பட்டியில் பற்றாளர் திருப்பதி, மேலவளவில் மகாராஜா, பெரிய கற்பூரம்பட்டியில் காளை தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
இதில் கல்வித்துறை, ரேஷன் கடை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. வாகனங்களை மதுபோதையில் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க போலீசார் வாகன தணிக்கை, நீர் நிலைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கற்களை ஊன்ற வேண்டும்.
அங்கன்வாடி குழந்தைகள் மையத்திற்கு செல்லும் சாய்தளத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று பேசினர்.
மேலவளவில் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதில், சோமகிரி மலை மற்றும் பறம்பு கண்மாயில் வழிபாட்டு தலங்கள், கல்வெட்டுக்கள், 80 வகை பறவைகள், 25 வகை பாலுாட்டிகள், 127 வகைத் தாவரங்கள் உள்ளதால் பல்லுயிர் தலமாக அறிவிக்க வேண்டும்.
முல்லை பெரியாறு பாசன பகுதிகளான மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களை ஒருங்கிணைத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். உலகம் வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என பேசினர்.
பெரிய கற்பூரம் பட்டியில் நுாறு நாள் வேலைத்திட்டத்தை விவசாய பணிகளுடன் இணைக்க வேண்டும். மது கடைகளை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும்
-
கேரளாவில் ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டேன்: பிரதமர் மோடி
-
முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
-
அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் விலை குறையவில்லை; தமிழக அரசு தலையிட ராமதாஸ் வலியுறுத்தல்
-
போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்
-
மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி: தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்