கேரளாவில் ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் புனலூர் ரயில் நிலையத்தில் நடந்த சோதனையில், ரூ.35 லட்சம் கபால பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ரயிலில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கேரள மாநிலம் புனலூர் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.


அப்போது, சென்னை எழும்பூர் ரயிலில் ஹவாலா பணம் ரூ.35 லட்சம் கொண்டு சென்ற கடையநல்லூர் அப்துல் அஜீஸ், விருதுநகர் பாலாஜி ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். ஹவாலா பணத்தை போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


இந்த பணத்தை அனுப்பி வைத்தவர் யார், யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி, போலீஸ் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement