போலீஸ் செய்திகள்...
கத்தி 'பாண்டிகள்' கைது
பேரையூர்: இப்பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலைப் அடிவார பகுதிகளில் கத்திகளுடன் இளைஞர்கள் சிலர் சுற்றித்திரிந்தனர். எஸ்.ஐ., சந்தோஷ்குமார் தலைமையில் போலீசார் மங்கல்ரேவு சமத்துவபுரம் அருண்பாண்டி 22. முத்துப்பாண்டி 25. பால்பாண்டி 22. முத்துநாகையாபுரம் சூரியபாண்டி 19. ஆகிய 4 பேரை கைது செய்தனர். மலையடிவாரப் பகுதிகளில் தனியாக வருவோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை பறித்து ஆந்திரா சென்று கஞ்சா வாங்கி வியாபாரம் செய்து வந்ததாக தெரிவித்தனர்.
டாஸ்மாக் கடையில் திருட்டு
பேரையூர்: காடனேரியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு விற்பனையாளர்கள் ராமகிருஷ்ணன், வீரராஜபாண்டி ஆகியோர் கடையைப் பூட்டி விட்டுச் சென்றனர். மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து 127 மது பாட்டில்களைத் திருடிச் சென்றனர். எஸ்.ஐ.,வேலுச்சாமி விசாரிக்கிறார்.
பஸ் மறியல்
மேலுார்: வெள்ளரிப்பட்டி டோல்கேட்டில் வி.சி.க., சார்பில் மதுரை கலெக்டர் சங்கீதாவை மாற்றகோரி பஸ் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகி அரசமுத்து பாண்டி, மேலுார் சசி தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பினர். அதனால் மேலூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
மேலும்
-
கேரளாவில் ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டேன்: பிரதமர் மோடி
-
முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
-
அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் விலை குறையவில்லை; தமிழக அரசு தலையிட ராமதாஸ் வலியுறுத்தல்
-
போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்
-
மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி: தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்