அம்பேத்கர் ஜெயந்தி

மதுரை: மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழா நடந்தது. மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெற்றிச்செல்வி வரவேற்றார். பொதுச் செயலாளர் பாரதிராஜா, பட்டியல் அணி தலைவர் முத்துமாரி, செயலாளர் சின்னச்சாமி, கூட்டுறவு பிரிவு துணைத் தலைவர் தீபன்முத்தையா முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், முன்னாள் தலைவர் சசிகுமார் பேசினர். செயலாளர் ராக்கப்பன் நன்றி கூறினார்.

Advertisement