பெண் தூக்கிட்டு தற்கொலை

வேடசந்தூர்: கன்னிவாடி ஸ்ரீராமபுரம் பண்ணைபட்டியை சேர்ந்தவர்கள் பிரம்மசாமி 21, மனைவி தர்ஷனா 18. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வேடசந்தூர் நாகம்பட்டியில் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று தர்ஷனா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வேடசந்தூர் போலீசார் விசாரணையில், இவர்களது உறவினர்கள வீட்டிற்கு வந்து இருவரும் அண்ணன் தங்கை உறவு என தெரிந்தும் ஏன் திருமணம் செய்தீர்கள் என கேட்டதால் மனமுடைந்து தர்ஷனா தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

Advertisement