கட்டுமானம், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கட்டிட பொறியாளர்கள் சங்கம், கட்டிட பொறியாளர்கள் தொண்டு அறக்கட்டளை சார்பில் நாளை (மே 3) முதல் மே 5 வரை கட்டுமானம், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., மகாலில் நடக்கிறது.

இக்கண்காட்சியை அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். எம்.பி., சத்திதானந்தம், கலெக்டர் சரவணன், முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ.,க்கள் காந்திராஜன், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, முன்னாள் மேயர் மருதராஜ் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை கட்டிட பொறியாளர் சங்க தலைவர் தங்கதுரை, செயலாளர் குணசீலன், பொருளாளர் சிவபாலன், கட்டிட பொறியாளர் அறக்கட்டளை தலைவர் குமரசேன், செயலாளர் பெஞ்சமின் ஆரோக்கியம், பொருளாளர் ஜான் சந்தியாகு, கண்காட்சி கமிட்டி தலைவர் ரியாஸ் அகமது, செயலாளர் லட்சுமி நாராயணன், பொருளாளர் விக்டர் தனபால் ஆகியோர் செய்கின்றனர். கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

Advertisement