49 நிறுவனங்களுக்கு அபராத அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளர்கள் தினத்தில் பணியாளர்களுக்கு விடுப்பு வழங்காத 49 நிறுவனங்களுக்கு அபராத அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளர்கள் தினத்தன்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் தொழிலாளர் உதவி கமிஷனர் மலர்கொடி தலைமையில் 86 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் 23 கடைகள், 26 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 49 நிறுவனங்களுக்கு அபராத அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய விடுமுறை நாளில் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement