மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்

10

இஸ்லாமாபாத்; சொந்த நாட்டு மக்களுக்காக மூடப்பட்ட அட்டாரி எல்லையை பாகிஸ்தான் கடும் விமர்சனங்களுக்கு பின்னர் மீண்டும் திறந்துள்ளது.



பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்தியா எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.


பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாகவும் அதற்கென காலக்கெடுவையும் இந்தியா விதித்தது. மத்திய அரசின் கெடு முடிந்து பின்னர் அது தளர்த்தப்பட்டது.


அதேநேரத்தில் பாகிஸ்தான் தமது எல்லையை மூடியதால் இந்தியாவில் இருக்கும் பாக். மக்கள் தவித்தனர். சொந்த நாட்டு மக்களை ஏற்க பாகிஸ்தான் மறுப்பாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இந் நிலையில் 24 மணி நேரம் கழித்த தற்போது மூடப்பட்ட அட்டாரி எல்லை வாயில்களை பாகிஸ்தான் திறந்துள்ளது. இதையடுத்து, எல்லையில் தவித்த பாகிஸ்தானியர்கள் அவர்களின் சொந்த நாடுகளை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர்.

Advertisement