சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு; ஆட்சி யாருக்கு?

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது, இன்று மே 3ம் தேதி இரவுக்குள் தெரிந்து விடும்.
சிங்கப்பூரில் இன்று (மே 03) பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடந்தது. ஆளும் கட்சி 32 புதிய முகங்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்துள்ளது. 30 லட்சம் பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். 2024ம் ஆண்டு தரவுகளின் படி சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்தியர்கள் 7.6 சதவீதமும், மலாய் மக்கள் 15.1 சதவீதமும், சீனர்கள் 75.6 சதவீதமும் உள்ளனர்.
97 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து ஓட்டளித்தனர். கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு 63 சதவீத பேரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 15 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக லாரன் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இன்று மே 3ம் தேதி இரவுக்குள் வெளியாக உள்ளன.
கடந்த 2020ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.





மேலும்
-
11 நகரங்களில் சதமடித்த வெயில்: வேலூரில் அதிகம்
-
ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தென்னாப்ரிக்கா வீரர் ரபாடாவுக்கு தடை
-
பாகிஸ்தானால் வெற்றி பெற முடியாது: பரூக் அப்துல்லா
-
டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய கும்பல் சிக்கியது; வங்க தேசத்தினர் 6 பேர் உட்பட 11 பேர் கைது
-
பாக்., பெண்ணை மணந்த சிஆர்பிஎப் வீரர் பணி நீக்கம்
-
மருத்துவமனை மீது வான் வழி தாக்குதல்: தெற்கு சூடானில் 4 பேர் பலி