இந்தோனேஷியாவில் 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை: தலையிட மத்திய அரசுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடில்லி:இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் மூவருக்கு உதவும் வகையில் மத்திய அரசு தலையிட டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்தியாவைச் சேர்ந்த ராஜூ முத்துக்குமரன், செல்வதுரை தினகரன் மற்றும் கோவிந்தசாமி விமல்காந்தன் ஆகியோர் இந்தோனேஷியாவில் கப்பல் கட்டும் தளத்தில் வேலைபார்த்து வந்தனர். அங்கு அவர்கள் போதைப்பொருள் வைத்து இருந்ததாக, அந்நாட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 25ம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து அவர்களின் மனைவிகள் மற்றும் உறவினர்கள், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தங்களது குடும்பத்தில் அவர்களின் சம்பளத்தை நம்பியே உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.
அவர்களை மீட்டுத்தர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா பிறப்பித்த உத்தரவு: இந்தோனேஷியா சிறையில் உள்ளவர்களுக்கு சட்ட உதவி மற்றும் மேல்முறையீடு தொடர்பான தீர்வுகளை கிடைக்க அந்நாட்டிற்கான இந்தியத் தூதரகம் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவர்களுக்கும், இந்தியாவில் உள்ள குடும்பத்தினருடன் பேசுவதற்கான உதவியை செய்ய வேண்டும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தோனேஷியா அரசை தொடர்பு கொண்டு, அவர்களின் உரிமையை காக்க தேவையான நடவடிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தம் அல்லது சர்வதேச முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.








மேலும்
-
தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை நிறுத்த அரசு திட்டமா; ராமதாஸ் கேள்வி
-
லாரி - சுற்றுலா வேன் மோதி விபத்து; இத்தாலியை சேர்ந்த 2 பேர் உட்பட 7 பேர் பலி
-
டில்லி ரயில்வே ஸ்டேஷனில் 'பை' ஏற்படுத்திய பரபரப்பு: வெடிகுண்டு என பயணிகள் பீதி
-
நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், அணியக்கூடாத ஆபரணங்கள்; வழிகாட்டுதல்கள் வெளியீடு
-
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பாதுகாப்பை திரும்பப்பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது; திருமாவளவன்
-
செந்தில் பாலாஜிக்கு பதிலாக வரப்போகும் பொறுப்பு அமைச்சர் யார்; கோவை தி.மு.க.,வில் ஆர்வம்