டிஜிட்டல் கிராப் சர்வே பணி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வேளாண்மை துறையினருடன், தனியார் வேளாண் கல்லுாரி மாணவர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர், பெருவங்கூர், நீலமங்கலம், நிறைமதி, தென்கீரனுார், பொற்படாக்குறிச்சி மற்றும் விளம்பார் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் தொடர்பான விவரங்கள் குறித்து டிஜிட்டல் கிராப் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேளாண்மை துறை அலுவலர்களுடன், கிராமப்புற வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி மேற்கொள்ளும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவர்களும் இணைந்து, இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் பொன்னரசன் தலைமையில் வேளாண் அலுவலர் விஜியலட்சுமி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பணியில் ஈடுபட்டனர்.
இதில் டிஜிட்டல் கிராப் செயலில் நிலத்தின் உரிமையாளர், நிலத்தின் பரப்பளவு, சர்வே எண் மற்றும் பயிர் சாகுபடி குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும்
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
-
போப் தோற்றத்துடன் அதிபர் டிரம்ப் படம் வெளியீடு; சமூக வலைதளத்தில் வைரல்!
-
சென்னையில் தொடங்கியது பா.ஜ., மையக்குழு கூட்டம்; நட்டா தலைமையில் ஆலோசனை!
-
மதுரையில் ஜூன் 1ல் கூடுகிறது தி.மு.க., பொதுக்குழு!