அறிவு திறன் தேர்வு 

புதுச்சேரி : புதுச்சேரி வேல்ராம்பட்டில் உள்ள சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 25வது ஆண்டு, வெள்ளி விழாவினை முன்னிட்டு, வனஜாவதி அம்மையார் நினைவு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான அறிவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வில் 11 மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 1,500க்கும் மேற்பட்ட, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகள் 65 பேர் தேர்வாகியுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் 2025---26ம் கல்வியாண்டில் சாரதா கங்காதரன் கல்லுாரியில் பட்ட மேற்படிப்பு பயில்வதற்காக சேரும் பட்சத்தில், அவர்களுக்கு, அவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ப 10 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement