ம.பி.,யில் புலி தாக்கி பண்ணை தொழிலாளி பலி

பாலகாட்: மத்திய பிரதேச மாநிலத்தில் புலி தாக்கியதில் பண்ணை தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் திரோடி காவல் நிலையப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பண்ணையில் பிரகாஷ் பனே 50, என்பவர் வேலை செய்து வருகிறார். அவர் இன்று அதிகாலை தனது பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது புலி தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வனத்துறை துணை அதிகாரி பி.எல். சிர்சம் கூறியதாவது:

மாவட்ட தலைமையகத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள குண்ட்வா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக புலி, ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த பிரகாஷ் பனேயில் அலறல் சத்தம் கேட்டதும் அருகில் இருந்த மக்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கிருந்த புலி மீது கற்களை வீசி விரட்டியுள்ளனர். அங்கு பிரகாஷின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. இந்த நிலையில் அந்த புலி, கன்ஹா மற்றும் பென்ச் புலிகள் காப்பகத்தின் தாழ்வாரத்தில் உள்ள புதர்களுக்குள் புலி தப்பிச் சென்றுவிட்டது.


இந்த சம்பவத்தை அடுத்து, புலியின் இருப்பு குறித்து தங்கள் புகார்களை வன ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர். பலியான பிரகாஷ் பனேயின் உடல் பிரேத பரிசோதனைக்காக கட்டாங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பெஞ்ச் புலிகள் காப்பாகத்தை சேர்ந்த குழு, புலியை பிடிக்க கூண்டுகளை அமைத்து வருகிறது.

இவ்வாறு சிர்சம் கூறினார்.

Advertisement