வணிகர் தினத்தன்று 3 கமிட்டிகளில் ஏலம் ரத்து

விழுப்புரம் : வணிகர் தினத்தையொட்டி, வரும் 5ம் தேதி 3 மார்க்கெட் கமிட்டிகளில் ஏலம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகர் தினத்தை முன்னிட்டு, வரும் 5ம் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி, அவலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டி விற்பனைக்கூடத்தில் ஏலம் நடைபெறாது. 6ம் தேதி இந்த விற்பனைக் கூடங்கள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், திண்டிவனம், செஞ்சி, அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிகள் 5ம் தேதி வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement