ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே

புதுடில்லி: '' ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பின்னணி தெரியவில்லை,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து இருந்த காங்கிரஸ், அது எப்போது துவங்கும் எனவும், விரிவான திட்டத்தை வெளியிட வேண்டும் எனக்கூறி வந்தது. தெலுங்கானா மாநில அரசின் திட்டத்தை பின்பற்ற வேண்டும் எனக்கூறிவந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாங்கள் கூறிய போது, ஜாதி ரீதியில் சமூகத்தை பிரிக்க நாங்கள் முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர்கள் குற்றம்சாட்டினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதனை நாங்கள் மீண்டும் வலியுறுத்திய போது மத்திய அரசு ஏற்கவில்லை. ஆனால், தற்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்து உள்ளனர்.
இதன் பின்னால் இருக்கும் காரணம் குறித்து தெரியவில்லை. இதில் இருக்கும் ஒரு நல்ல விஷயம், எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது தான். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
'சாப்ரான் பெனகோட்டா'ருசி... ஆஹா... அடடா...அய்யோடா!
-
குறள் சொல்லும் குரல்
-
உளவு தகவல் சேகரிப்புக்கு அதிநவீன கருவி; பறக்க விட்டு சோதனை செய்தது இந்தியா!
-
திருவாரூரில் அரசு பஸ்- வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பரிதாப பலி
-
தி.மு.க., மா.செ.,க்கள் செல்வாக்கு; கடிவாளம் போட்ட முதல்வர்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!