விபத்தில் பலியானதற்கு இழப்பீடு உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை : புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் விபத்தில் பலியானதற்கு இழப்பீடு கோரியதில்,' மனுதாரரின் மனு மூப்புத் தன்மை அடிப்படையில் பரிசீலனைக்கு வரும்போது, இழப்பீடு வழங்கப்படும்,'என அரசு தரப்பு கூறியதை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை பைசல் செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் வேலம்மாள் தாக்கல் செய்த மனு:
எனது மகன் பிரபாகரன் 2024 ல் திருச்சி-- - புதுக்கோட்டை சாலையில் விபத்தில் இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் எனக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்: போலீசார் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். மனுதாரரின் மனுவிற்கு பதிவு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. மூப்பு பட்டியல், மற்றும் நிதி இருப்பை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கப்படுகிறது. மனுதாரரின் மனு மூப்புத் தன்மை (சீனியாரிட்டி) அடிப்படையில் பரிசீலனைக்கு வரும்போது, இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.
மேலும்
-
பாக்., பெண்ணை மணந்த சிஆர்பிஎப் வீரர் பணி நீக்கம்
-
மருத்துவமனை மீது வான் வழி தாக்குதல்: தெற்கு சூடானில் 4 பேர் பலி
-
பழிதீர்க்குமா சென்னை? பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு தேர்வு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே
-
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!
-
கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை