கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை

1

மாஸ்கோ: "உக்ரைன் மாஸ்கோவை தாக்கினால், கீவ் நகரின் பாதுகாப்புக்கு யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது,'' என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உக்ரைனுடனான போரை மே 8, மே 9 மற்றும் மே10 ஆகிய மூன்று நாள் நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார்.

இந்த மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, 'போர் நிறுத்தம் 30 நாட்கள் நீடிக்கும் வரை தான் தயாராக இருப்பதாக' கூறினார். நீண்ட கால தீர்வை தாம் விரும்புவதாகக் கூறினார்.

இந்நிலையில் ரஷ்யா பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரும் முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெட்வதேவ் கூறியதாவது:
ஜெலன்ஸ்கியிடம் யாரும் பாதுகாப்பு உத்தரவாதங்களை கேட்கவில்லை. மே.9 ல் நடைபெற உள்ள இரண்டாம் உலகப்போரின் வெற்றிக்கொண்டாட்டங்களின் போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை உக்ரைன் தாக்கினால், மே 10ல் உக்ரைன் தலைநகர் கீவ் எப்படி இருக்கும் என்று யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது.
இவ்வாறு டிமிட்ரி மெட்வதேவ் கூறினார்.

Advertisement