சந்தனமாரியம்மன் கோயில்  சித்திரை விழா காப்பு கட்டு 

சிவகங்கை : சிவகங்கை முதலியார் தெரு சந்தனமாரியம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் நேற்று சித்திரை திருவிழா துவங்கியது.

இக்கோயிலில் சித்திரை திருவிழா மே 1ம் தேதி முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. நேற்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் அம்மனுக்கு காப்பு கட்டி, பக்தர்கள் விரதத்தை துவக்கினர். தினமும் சந்தன மாரியம்மனுக்கு அபிேஷக ஆராதனை நடைபெறும். மே 9 மாலை 5:00 மணிக்கு கரகம், பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அம்மன் நகர் வலம் வருதல் நடைபெறும். விழாக்கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Advertisement