மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது எங்கள் கூட்டணி: இ.பி.எஸ்.,

26

சென்னை: மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி, எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை என்று அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கூறியுள்ளார்.


சென்னையில், தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., தலைமை தாங்கினார். அ.தி.மு.க., முக்கிய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

அ.தி.மு.க., கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது:

அ.தி.மு.க.,வை பா.ஜ., மிரட்டி பணிய வைத்து இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை, மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி.

2026 -சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி, வலிமையானது மட்டுமல்ல.நாங்கள் வெற்றிக் கூட்டணி, வெற்றி பெறுவதற்காக கூட்டணி வைத்துள்ளோம்.

இன்னும் இந்த கூட்டணிக்கு பல கட்சிகள் வர உள்ளன.

அ.தி.மு., தலைமையில் தான் கூட்டணி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இவ்வாறு இ.பி.எஸ். பேசினார்.

Advertisement