எல்லையில் 9வது நாளாக பாக். அத்துமீறல்: இந்தியா பதிலடி

ஸ்ரீநகர்; எல்லையில் 9வது நாளாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி அளித்தனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா ரத்து செய்துள்ளது.
அதே நேரத்தில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 9வது நாளாக தமது தாக்குதலை பாகிஸ்தான் தொடர்ந்தது. உரி மற்றும் அக்னூர் பகுதியில் போர்நிறுத்த மீறல்களை புறம்தள்ளி தாக்குதல் நடத்தியது.
சிறிய ஆயுதங்களைக் கொண்டும், துப்பாக்கியை பிரயோகப்படுத்தியும் பாகிஸ்தான் தாக்கியது. இதை எதிர்கொண்டு இந்தியாவும் பதிலடி தந்ததால் இரண்டு தரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்தன.
அடுத்து வரும் நாட்களில் பாகிஸ்தான் மீண்டும் எல்லை மீறி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எல்லையில் பாதுகாப்பை இந்திய ராணுவம் அதிகரித்துள்ளது.