'ஸ்டீபிள் சேஸ்': அவினாஷ் ஏமாற்றம்

ஷாங்காய்: டைமண்ட் லீக் 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் 8வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் டைமண்ட் லீக் தடகளம் சீசன் 2 நடந்தது. ஆண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் 30, பங்கேற்றார். மொத்தம் 16 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில், பந்தய துாரத்தை 8 நிமிடம், 23.85 வினாடியில் கடந்த இவர், 8வது இடம் பிடித்தார்.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற எத்தியோப்பியாவின் ஆப்ரஹாம் சைம் (8 நிமிடம், 07.92 வினாடி), கென்யாவின் எட்மண்ட் (8 நிமிடம், 08.68 வினாடி), சைமன் கிப்ரோப் (8 நிமிடம், 09.05 வினாடி) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
இரண்டு சுற்று டைமண்ட் லீக் 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டம் முடிவில் இந்தியாவின் அவினாஷ், 1 புள்ளி மட்டும் பெற்று, கடைசி இடத்தில் (12) உள்ளார்.

Advertisement