சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறி, ஆறுகளின் தண்ணீரை தேக்கவோ, திசை திருப்பவோ அணை உள்ளிட்ட கட்டுமானங்களை இந்தியா கட்டினால் அதை இடிப்போம் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசீப் தெரிவித்துள்ளார்.
@1brகாஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலுக்கு உடனடி பதிலடியாக, பாகிஸ்தான் உடனான உறவை முறிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தது. அதில் முக்கியமானது சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது. சிந்து நதிநீரை நிறுத்துவதால் மின்சாரம், உணவு உற்பத்தி பெருமளவு, பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது.
சிந்து நதிநீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசீப் இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில் புதிதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
அவர் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டி:
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறி, ஆறுகளின் தண்ணீரை தேக்கவோ, திசை திருப்பவோ அணை உள்ளிட்ட கட்டுமானங்களை இந்தியா கட்டினால் அது பாகிஸ்தான் மீதான தாக்குதல் என்றுதான் கருதப்படும். சிந்து நதிநீரை தடுக்க இந்தியா கட்டுமானங்களை கட்டினால் அதை எங்கள் ராணுவம் தகர்க்கும்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; அது பாகிஸ்தானுக்கு எதிரான போர் அறிவிப்பாக இருக்கும். பீரங்கிகள் துப்பாக்கியால் சுடுவது மட்டும் தாக்குதல் அல்ல. பல வகையில் தாக்குதல் நடத்தலாம். நதிநீர் ஒப்பந்ததை மீறுவதும் அதில் ஒன்று. இதன் காரணமாக மக்கள் பசியாலும் தாகத்தாலும் மடிந்து போவார்கள் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசீப் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (3)
சண்முகம் - ,
04 மே,2025 - 05:37 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03 மே,2025 - 20:09 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
03 மே,2025 - 19:39 Report Abuse

0
0
Reply
மேலும்
-
'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளை தி.மு.க., இழக்கும்'
-
வெளிநாட்டில் படிக்க போகிறீர்களா? 2000+ பல்கலைக்கழக முழுவிவரம் இதோ !
-
ரூ.1,500 கடனுக்காக தொழிலாளி கொலை
-
தாண்டிக்குடியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு; 'பவுன்சர்கள்' அடாவடி
-
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் நாகை மீனவர்கள் 20 பேர் 'அட்மிட்'
-
ரஷ்யாவின் 3 நாள் போர் நிறுத்தம் நாடகம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சாடல்!
Advertisement
Advertisement