ரஷ்யாவின் 3 நாள் போர் நிறுத்தம் நாடகம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சாடல்!

கீவ்: ''ரஷ்ய அதிபர் புடின் முன்மொழிந்த 3 நாள் போர் நிறுத்தம் ஒரு நாடகம்'' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக சாடியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் தீவிர பேச்சு நடத்தி வருகிறார். முழுமையான போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா பல நிபந்தனைகள் விதித்த நிலையில், அதை உக்ரைன் ஏற்காததால் பேச்சில் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், வரும் மே 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை தற்காலிக போர் நிறுத்தம் செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது. இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, மே 8 முதல், 10ம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார்.
இது தொடர்பாக, செய்தி சேனலுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: ரஷ்ய அதிபர் புடின் முன்மொழிந்த 3 நாள் போர் நிறுத்தம் ஒரு நாடகம். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று நாட்களில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான திட்டத்தை உருவாக்குவது சாத்தியமில்லை. இது நீண்டகால அமைதிக்கான உக்ரைனின் தயார்நிலையை சோதிக்கும் முயற்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
ஐ.எம்.எப்., செயல் இயக்குநர் சுப்ரமணியம் நீக்கம்; 6 மாதத்திற்கு முன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
-
பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து தம்பதி பரிதாப பலி; அதிகாலை வேளையில் சம்பவம்
-
கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் உயிரிழப்பு
-
'சாப்ரான் பெனகோட்டா'ருசி... ஆஹா... அடடா...அய்யோடா!
-
குறள் சொல்லும் குரல்