பிரிமீயர் லீக் : 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

2

பெங்களூரு: பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


சின்னசாமி மைதானத்தில் நடந்து வரும் 52-வது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கோலி - பெத்தேல் அதிரடியான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

இருவரும் சென்னையின் பவுலிங்கை சிக்சஸருக்கும், பவுண்டருக்குமாக பறக்கவிட்டனர். இதனால், 10.1 ஓவரிலேயே அந்த அணி 100 ரன்களை கடந்தது. அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். பெத்தேல், 33 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்த போது, பதிரானா பந்தில் அவுட்டானார். தொடர்ந்து, கோலி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த பட்டிதர் (11), ஜிதேஷ் (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.


இறுதியில் களமிறங்கிய ரொமேரியோ ஷெப்பேர்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் 2வது அதிகவேக அரைசதமாகும். கே.எல்.ராகுல், பேட் கம்மின்ஸ் ஆகியோர் 14 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர். ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

அதேபோல, பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் கலீல் அகமது ஒரே ஓவரில் 33 ரன்களை வாரி வழங்கினார். இந்த சீசனில் இது மோசமான ஓவராகும். இவர் 3 ஓவர்களில் 65 ரன்களை கொடுத்துள்ளார்.20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.


214 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியில் துவக்க வீரர்கள் ஆயுஷ், ரஷீத் இருவரும் அதிடியாக ரன் குவிக்க துவங்கிய நிலையில் ஷேக் ரஷீத் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாம் கரன் 5 ரன்னில் அவுட்டானர். தொடர்ந்து ஆயுஷ் மாத்ரே ரவீந்திர ஜடேஜா ஜோடி அதிரடியாக ஆடிய நிலையில் ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில் அரை சதடித்தார்.. தொடர்ந்து அதிரடியாக ஆடி ஆயுஷ் 94 ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.


அடுத்ததாக பிரெவி்ஸ் வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.தோனியும், ஜடேஜாவும் ரன் குவிந்தனர். 6 பந்துகளில் 15 ரன்கள் வெற்றி இலக்கு என்ற நிலையில் 12 ரன்களில் தோனி அவுட்டாகி வெளியேறினார். ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழக்காமல்இருந்தார்.இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது சென்னை அணி. இதையடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

Advertisement