ஐ.எம்.எப்., செயல் இயக்குநர் சுப்ரமணியம் நீக்கம்; 6 மாதத்திற்கு முன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு

புதுடில்லி: ஐ.எம்.எப்., செயல் இயக்குனர் பொறுப்பில் இருந்து கே.வி.சுப்ரமணியம் நீக்கம் செய்யப்பட்டார். 6 மாதத்திற்கு முன்பே பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநராக, இந்தியா சார்பில் கே.வி.சுப்ரமணியம் பொறுப்பு வகித்து வந்தார். இவர், 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிய 6 மாதம் உள்ள நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பில், “சர்வதேச நாணய நிதியத்தில் (இந்தியா) செயல் இயக்குநர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனை உடனடியாக விடுவிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அவரது பதவிக்காலம் குறைக்கப்பட்டதற்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
இவர் சமீபத்தில், ஐ.எம்.எப்., வெளியிடும் உலகப் பொருளாதாரம் தொடர்பான புள்ளி விவரங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார். அதுமட்டுமின்றி, அவர் எழுதிய புத்தகத்துக்காக மேற்கொள்ளப்பட்ட விளம்பர செயல்பாடுகளும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில் தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா சார்பில் புதிய செயல் இயக்குனர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாகிஸ்தான், ஐ.எம்.எப்., நிதி உதவியுடன் காலத்தை ஓட்டி வருகிறது. அந்த நாட்டுக்கான அடுத்த கட்ட நிதியுதவி தொடர்பான செயல்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
யார் இந்த சுப்ரமணியம்?
* கே.வி. சுப்பிரமணியம் என்றும் அழைக்கப்படும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம், மத்திய அரசின் 17வது தலைமை பொருளாதார ஆலோசகர் ஆவார். மேலும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இளையவரும் ஆவார்.
* 2018 முதல் 2022 வரை நாட்டின் இளைய தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த சுப்பிரமணியம், நவம்பர் மாதம் 2022ல் ஐ.எம்.எப்., நிர்வாக இயக்குநராக சேர்ந்தார்.
* இவர் ஐஐடி கரக்பூரில் மின் பொறியியல் பயின்றார், பின்னர் ஐ.ஐ.எம்., கோல்கட்டாவில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றார். செபி மற்றும் ரிசர்வ் வங்கியில் பல்வேறு நிபுணர் குழுக்களில் பணி செய்துள்ளார்.



மேலும்
-
பிரதமர் மோடியுடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு!
-
128 வயதான யோகா குரு காலமானார்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
-
தோல்வி பயத்தில் பா.ஜ., கூட்டணி பற்றியே எப்போதும் பேசுகிறார் ஸ்டாலின்; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
டிராவல்ஸ் உரிமையாளர் கொலை; துபாய் தப்பிய கோவை பெண் கைது
-
சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி; பிரதமர் லாரன்ஸ்க்கு மோடி வாழ்த்து!
-
பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்கள் கசிவு; பஞ்சாபில் இருவர் கைது