கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளாவில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கொடுவள்ளி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த காரை போலீசார் வழி மறித்தனர்.
அப்போது காரில் இருந்த இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் காரில் ரகசிய அறை அமைத்து, ரூ.5 கோடி பணம் கட்டுக் கட்டாக அடுக்கி வைத்து கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஹவாலா பணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
காரில் ரகசிய அறை அமைத்து ஹவாலா பணத்தை கடத்திய 2 பேரைப் பிடித்து கேரள போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த ரூ.5 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.







மேலும்
-
4 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
பிரதமர் மோடியுடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு!
-
128 வயதான யோகா குரு காலமானார்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
-
தோல்வி பயத்தில் பா.ஜ., கூட்டணி பற்றியே எப்போதும் பேசுகிறார் ஸ்டாலின்; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
டிராவல்ஸ் உரிமையாளர் கொலை; துபாய் தப்பிய கோவை பெண் கைது
-
சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி; பிரதமர் லாரன்ஸ்க்கு மோடி வாழ்த்து!