'சாப்ரான் பெனகோட்டா'ருசி... ஆஹா... அடடா...அய்யோடா!

சென்னை, வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் இருக்கிறது 'பிங்க் பொட்டட்டோ' சைவ உணவகம். அடர்த்தியாய் 'ஏசி' குளிர்; உள்ளம் தாங்கப்படுவது போல் உணர்வூட்டும் இருக்கைகள்; காற்றில் கசியும் மெல்லிசை; மேஜையில்... சாப்ரான் பெனகோட்டா!

எதிரில் இருந்த எல்.இ.டி., திரையில் வரிசை கட்டியபடி வெளிநாட்டு உணவுகளின் ஊர்வலம்!

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி கலவையிலான பெர்ரி சாஸில் குளித்திருந்த ஜெல்லி போன்ற சாப்ரான் பெனகோட்டா, தரமற்ற சாலைகளையும் அதிராமல் கடக்கும் தரமான சொகுசு வாகனம் போல் ஸ்பூனால் தொட்டதும் ஆடி குலுங்கி அடங்குகிறது. ஸ்பூனில் கிள்ளி அள்ளி எடுத்தால்... மிதமான இனிப்புடன் அலாதியான ருசி! இத்தாலிய இனிப்பு வகையான இதன் ருசி கூட்ட... குங்குமப்பூ!

காய்ச்சிய பாலு டன் வெஜிடேரியன் ஜெல், கிரீம், குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து கெட்டியாக்கி குளிர்விக்கப்படும் இந்த பென கோட்டாவை நான் ருசித்துக் கொண்டிருக்கையில், வெளியே 'அக்னி நட்சத்திர' டிரெய்லர் போல் வேளச்சேரியை வறுத்துக் கொண்டிருந்தது வெயில். என் பார்வைக்குள் பதிந்து கொண்டிருந்த கடைகளில் சட்டென மின்தடை!

'நிச்சயம் அணில்தான் காரணமாக இருக்கும்' என்று எனக்குள் பெருமூச்சு விட்ட நேரத்தில், 'ஒன் மோர் பெனகோட்டா' என்றது பின் மேஜை.

ருசியில் சிக்கியது நீங்களா?

70944 80074

Advertisement