திருப்புவனத்தில் வைகை ஆற்றில் பச்சை பட்டில் இறங்கிய அழகர்

திருப்புவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு பச்சை பட்டில் அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

திருப்புவனத்தில் பழமை வாய்ந்த பாலகிருஷ்ணபெருமாள் கோயில் உள்ளது. இந்தஆண்டு திருவிழா நான்காம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

நேற்று காலை கோயிலில்இருந்து அழகர் தங்க நிற குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கிளம்பினார். நான்கு ரத வீதிகளையும் வலம் வந்த அழகர் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன்கோயில் வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

காலை 9:30 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்தின் இடையே அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து அவரை குளிர்வித்தனர்.

பக்தர்கள் பலரும் அழகருக்கு சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். பின் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் அழகர் நள்ளிரவில் வீரபத்ர கோயிலில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

Advertisement