4 விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அதிகரிப்பு

சென்னை:சென்னை - தஞ்சாவூர், கொல்லம் உட்பட நான்கு விரைவு ரயில்களில், கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

தெற்கு ரயில்வே அறிக்கை:

எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும், கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, எழும்பூர் - கொல்லம் விரைவு ரயிலில், இரு மாக்கத்திலும், கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை, 1 முதல் இணைக்கப்படும்

நாகர்கோவில் - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை 5 முதல்; எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை, 2 முதல் இணைத்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement