ஹோமோ செக்ஸ்: 4 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர், சீனிவாசபுரம் குளத்தில், ஏப்., 25, மதியம் 13, 12 வயதில் இரு சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த ராகுல், 18, அவரது நண்பர்களான 17, 15, 14, 15, வயது சிறுவர்கள் என, மொத்தம் ஐந்து பேரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள், இரு சிறுவர்களை அடித்து, ஹோமோ செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளனர். இரு சிறுவர்களும் மனச்சோர்வாக இருந்துள்ளனர்.

தகவலறிந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வல்லம் மகளிர் எஸ்.ஐ., அபிராமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். ராகுல் மற்றும் நான்கு சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராகுலை சிறையிலும், சிறுவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.

Advertisement