வேளாண் கூட்டுறவு சங்கத்தில்ரூ.4.51 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்


ஆத்துார்:ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. அதில் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி பெரம்பலுார், கள்ளக்

குறிச்சி பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், 3,336.75 குவிண்டால்(100 கிலோ ஒரு குவிண்டால்) கொண்ட, 5,612 மூட்டை மஞ்சளை கொண்டு வந்தனர். வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர்.

குவிண்டால் விரலி ரகம், 13,089 முதல், 16,664 ரூபாய்; உருண்டை ரகம், 11,589 முதல், 14,029; பனங்காலி(தாய் மஞ்சள்), 26,969 முதல், 29,369 ரூபாய்க்கு விலைபோனது. இதன்மூலம், 4.51 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட விரலி ரகம் குவிண்டாலுக்கு, 200 ரூபாய், உருண்டை ரகம், 800, பனங்காலி, 300 ரூபாய் விலை குறைந்தது.

Advertisement