சின்னசேலத்தில் கலெக்டர் ஆய்வு

சின்னசேலம், : சின்னசேலம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.

சின்னசேலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டப் பணிகளின் தரம் குறித்து கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.

இதில் நைனார்பாளையத்தில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் கட்டுமானம், காளசமுத்திரத்தில், புதிதாக அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டையின் மண் பரிசோதனை மற்றும் வாசுதேவனுாரில், நபார்டு திட்டத்தின் கீழ், ரூ 58.69 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் தார் சாலை பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும் சின்னசேலம் அருகே ரூ 5.71 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் கட்டுமான பணிகள், அம்மையகரம் ஊராட்சியில் இயங்கி வரும் கூடுதல் நாற்றாங்கால் பண்ணைகளில் புதிய மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள், ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய தகனமேடை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது பி.டி.ஓ.,க்கள் சவரிராஜ், ரங்கராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement