'வருங்கால முதல்வர் இ.பி.எஸ்.,க்குபிறந்தநாள் விழா' என கொண்டாட அறிவுரை
ஓமலுார்:ஓமலுார் அருகே உள்ள, அ.தி.மு.க., அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதில் வரும், 12ல் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை நடந்தது.
தொடர்ந்து இளங்கோவன் பேசியதாவது: வரும், 12ல் இ.பி.எஸ்., பிறந்தநாளன்று, மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களில் அர்ச்சனை, சிறப்பு பூஜை நடத்தி, அன்னதானம் வழங்க வேண்டும். ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், முதியோர் இல்லங்களில் உணவு உடை வழங்க வேண்டும். அந்தந்த ஊரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்சியினர் ரத்த தானம் செய்ய வேண்டும். வருங்கால முதல்வர் இ.பி.எஸ்.,க்கு பிறந்தநாள் விழா என்று கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைப்பு செயலர் செம்மலை, ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் மணி, சித்ரா, ராஜமுத்து, நல்லதம்பி, ஜெயசங்கரன், சுந்தரராஜன், புறநகர் மாவட்ட ஒன்றிய, நகர செயலர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
ஆசிரியை கொலைக்கு பழிக்கு பழி விவசாயியை கொன்றவருக்கு வலை
-
இன்று இனிதாக பெங்களூரு
-
முதல்வரை ஒருமையில் பேசி வீடியோ மைசூரு சிறை வார்டன் 'சஸ்பெண்ட்'
-
லாரி - கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தின் 5 பேர் பலி
-
நாய்கள் கடித்ததில் ஏழு பேர் காயம்
-
சுகாஸை தியாகியாக சித்தரிப்பது ஏன்? பா.ஜ.,வுக்கு தினேஷ் குண்டுராவ் கேள்வி!