சுகாஸை தியாகியாக சித்தரிப்பது ஏன்? பா.ஜ.,வுக்கு தினேஷ் குண்டுராவ் கேள்வி!

பெங்களூரு : கொலையான பஜ்ரங்தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டியின் பெயரை, ரவுடி பட்டியலில் சேர்க்க, முந்தைய பா.ஜ., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை, நேற்று தன், 'எக்ஸ்' பக்கத்தில் பதிவேற்றி, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்ட பதிவு:
கடந்த 2020ம் ஆண்டு பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, சுகாஸ் ஷெட்டி பெயர், ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டது. இப்போது சுகாஸை தியாகியாக சித்திகரிக்கும் பா.ஜ., தங்கள் ஆட்சியின்போது, ரவுடி பட்டியலில் அவர் பெயரை சேர்த்தது ஏன்?
கடலோர மாவட்டங்களை வகுப்புவாத சோதனை களமாக மாற்றிய பெருமை பா.ஜ.,வையே சாரும். பா.ஜ., ஆட்சியில் இருக்கும்போது ரவுடிகளை உருவாக்கி, அவர்கள் பெயர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கின்றனர். எங்கள் ஆட்சியில் ரவுடிகள் இறந்தால் பெரிய மனிதர் போன்று சித்தரித்து தியாகி ஆக்கிவிடுகின்றனர்.
கடலோர மாவட்டத்தில் பா.ஜ., செய்யும் மோசமான அரசியலுக்கு பல உயிர்கள் பறிபோய் உள்ளன. பல வீடுகளில் விளக்குகள் அணைந்துள்ளன. ஆனாலும் அவர்களின் ரத்தவெறி இன்னும் நிற்கவில்லை.
தட்சிண கன்னடா மக்கள் புத்திசாலிகள். உணர்திறன் மிக்கவர்கள். பா.ஜ.,வின் தவறான நோக்கத்தை புரிந்து கொள்வர். இல்லாவிட்டால் பா.ஜ.,வின் மோசமான அரசியலால் மாவட்டத்தின் அமைதி சீர்குலைந்து விடும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
மேலும்
-
ரோகித் சர்மா 'குட்-பை' * டெஸ்ட் அரங்கில் இருந்து...
-
வில்வித்தை: இந்தியா அசத்தல்
-
முஷீருக்கு 'ஜாக்பாட்' * மும்பை பிரிமியர் ஏலத்தில்
-
பைனலில் இந்திய பெண்கள் * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்