நாய்கள் கடித்ததில் ஏழு பேர் காயம்

ராம்நகர்: கனகபுரா தாலுகா, பொம்மனஹள்ளியில் நேற்று தெரு நாய்கள் கூட்டமாக வந்து கடித்ததில், ரத்தனம்மா, நக் ஷத்ரா, உமா, சிராக், ராச்சையா, வெங்கடகிரி, கொல்லரடோடியை சேர்ந்த பெண் ஒருவர் என, மொத்தம் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் உடனடியாக கனகபுரா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது அப்பகுதியில் உள்ளோரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கிராமங்களில் உள்ள நாய்களை பிடிக்க கிராம பஞ்சாயத்து உறுப்பினர் குமாரசாமி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Advertisement