சேதமான பெருந்துறவு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கூவத்துார்:கூவத்துார் அருகே பெருந்துறவு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து சாலை பழுதடைந்து உள்ளது. இதனால் தினசரி சாலையில் நடந்து செல்பவர்கள், பைக், கார் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும் மஞ்சல் விளாகம் கிராமத்திற்கு செல்லும் மக்கள், திரவுபதி அம்மன் கோவில் அருகே செயல்படும் அரசுப் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பழுதடைந்த சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர்.

ஆகையால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement