மாத்துார் ஊராட்சியில் சாலை மறியல்

கச்சிராயபாளையம் : மாத்துார் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் ஊராட்சியில், 5 மற்றும், 6வது வார்டில், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதி மக்கள், மாத்துார்- கச்சிராயபாளையம் சாலையில் நேற்று காலை 8:30 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீசார், ஊராட்சி தலைவர் உமாராஜன், துணைத் தலைவர் அலமேலு வீரமணி ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்தி, உடனடியாக குடிநீர் வினியோகத்திற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதனால் காலை 9:00 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரோகித் சர்மா 'குட்-பை' * டெஸ்ட் அரங்கில் இருந்து...
-
வில்வித்தை: இந்தியா அசத்தல்
-
முஷீருக்கு 'ஜாக்பாட்' * மும்பை பிரிமியர் ஏலத்தில்
-
பைனலில் இந்திய பெண்கள் * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
Advertisement
Advertisement