சதுர்த்தியில் பாதுகாப்பு வழங்கிய39 தீயணைப்பு வீரருக்கு பாராட்டு
மேட்டூர்:விநாயகர் சதுர்த்தி, கடந்த ஆண்டு செப்., 7ல் கொண்டாடப்பட்டது. பின் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், லாரி, வேன், ஆட்டோக்களில், சிலைகளை மேட்டூர் கொண்டு வந்து காவிரியாற்றில் கரைத்தனர். ஒரு வாரம் வரை சிலைகள் கரைத்த நிலையில், அவர்களுக்கு மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர், விபத்து எதுவும் நடக்காதபடி பாதுகாப்பு கொடுத்தனர்.
அவர்களுக்கு மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சுகுமார் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் முன்னிலை வகித்தார். மேட்டூர் அணை ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்த பொன்னாடை, கேடயங்களை, ஆர்.டி.ஓ., சுகுமார், தீயணைப்பு அலுவலர், வீரர்களுக்கு வழங்கி பாராட்டினார். மேட்டூர், அனல்மின் நிலையம், ஓமலுார் தீயணைப்பு குழுவினர் என, 39 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன், செயலர் செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேலும்
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
-
கள்ளழகரை பார்க்கும் இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சரிதானா அழகர்கோவில் பட்டர் சொல்வது என்ன