டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்

'டொயோட்டா' நிறுவனம், அதன் 'இன்னோவா ஹைகிராஸ்' எம்.பி.வி., காரை 'எக்ஸ்க்ளூசிவ்' என்ற சிறப்பு எடிஷனில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 1.24 லட்சம் ரூபாய் அதிகம்.
இந்த சிறப்பு எடிஷன் கார், ஹைகிராஸ் காரின் உயர்ந்த 'இசட்.எக்ஸ்., -ஒ' மாடல் காரை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனினும், வெளிப்புற, உட்புற மாற்றங்கள், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இரு வேறு வெள்ளை நிறங்களில் வரும் இந்த காரில், முன்புற கிரில், அலாய் சக்கரங்கள், பம்ப்பர்கள், வீல் ஆர்சுகள், வெளிப்புற கண்ணாடி, ரூப் ஆகியவை கருப்பு நிறத்தில் வந்துள்ளன.
உட்புறத்தில், டேஷ்போர்டு, லெதர் சீட்கள் ஆகியவை டூயல் டோன் நிறத்தில் வந்துள்ளன. 'ஹைகிராஸ் இசட்.எக்ஸ்., - ஒ' காரில் வரும் அம்சங்கள் உட்பட, ஏர் ப்யூரிபையர், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, உட்புற அலங்கார விளக்குகள் ஆகியவை கூடுதலாக வழங்கப்படுகின்றன.
இரண்டாம் வரிசை கேப்டன் சீட்கள், முன்புற வெண்டிலேஷன் சீட்கள், பேனரோமிக் சன்ரூப், அடாஸ் வசதி, டூயல் ஜோன் ஏ.சி., உள்ளிட்ட அம்சங்கள் இதில் நீடிக்கின்றன.
இதில், 2 லிட்டர், 4 சிலிண்டர், ஸ்ராங் ஹைபிரிட் என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது, 186 ஹெச்.வி., பவர், 206 என்.எம்., டார்க்கை வெளிப்படுத்துகிறது.
இந்த காரின் மைலேஜ், 23.24 கி.மீ., ராக உள்ளது. இந்த இன்ஜினுடன், 'இ - சி.வி.டி.,' என்ற ஆட்டோ கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இன்ஜின் - 2 லிட்டர், 4 சிலிண்டர், ஸ்ராங் ஹைபிரிட் என்.ஏ., பெட்ரோல்
பவர் - 186 ஹெச்.பி.,
டார்க் - 206 என்.எம்.,
மைலேஜ் - 23.24 கி.மீ.,
மேலும்
-
சிட்டி கிரைம் செய்திகள்
-
தி.மு.க., 4 ஆண்டு சாதனை விளக்கபொதுக்கூட்டம் நடத்த தீர்மானம்
-
சாமல்பள்ளத்தை தொடர்ந்து மேலுமலை பாலம் திறப்பு 4 பால பணிகள் முடிவது எப்போது?
-
நாளை வெளியாகிறது 'ரிசல்ட்'; 9ம் வகுப்பு தேர்ச்சிக்கு கட்டுப்பாடு
-
திறக்க படாத துணை சுகாதார நிலையம்:மக்கள் அவதி
-
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன்