14 மையங்களில் 'நீட்' தேர்வு6,630 பேர் தேர்வெழுத தயார்



நாமக்கல்:இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான தேர்வு, இன்று நாடு முழுவதும் நடக்கிறது. 2024ல், பீஹார், உத்தரபிரதேச மாநிலங்களில், 'நீட்' தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தால், இந்தாண்டு பாதுகாப்பு கருதி அரசுப்பள்ளி, கல்லுாரிகள் தேர்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.


நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லுாரி, ராசிபுரம் ஆர்.புதுப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கார்கூடல்பட்டி உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெண்ணந்துார்


அலவாய்ப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரி, பள்ளிப்பாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என, 14 தேர்வு மையங்களில், 'நீட்' தேர்வு நடக்கிறது. அதில், மொத்தம், 6,630 பேர் தேர்வு எழுத தயார் நிலையில் உள்ளனர். மேலும், ஒவ்வோரு மையத்திலும் தேர்வு அறைகளில், 363 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement