விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கும் உணவிற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.
மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது: புதிய நடைமுறையாக உணவு கட்டுபாட்டு அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகே பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. பல இடங்களிலிருந்தும் வருபவர்கள் அரசிடம் அனுமதி வாங்குவது சிரமத்திற்குள்ளாக்கும்.
விரதமிருந்து சமைக்கும் பிரசாதம் கடவுளுக்கு வைத்த பின்பே பக்தர்களுக்கு வழங்குகிறோம். பிரசாதத்தை முதலில் அரசிடம் சமர்ப்பித்து பிறகு பக்தர்களுக்கு கொடுப்பது முறையற்றது. எனவே இந்த விதிகள் பக்தர்கள் கடமை செய்வதில் இடையூறு ஏற்படுத்தும். அரசு தளர்வு அளிக்க வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணம் ஒத்திவைப்பு
-
அடுத்தக்கட்ட நடவடிக்கை; எல்லையோர மாநில முதல்வர்களுடன் அமித்ஷா ஆலோசனை
-
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்; ராணுவத்திற்கு பாராட்டு
-
பாக்.,கில் தாக்குதல் நடத்தியது எப்படி: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்
-
எல்லையில் பதட்டம்: துணை ராணுவத்தினருக்கு விடுமுறை ரத்து
-
நாளை கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
Advertisement
Advertisement