நாளை கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்; மத்திய அரசு அழைப்பு

6


புதுடில்லி: நாளை (மே 08) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. பரபரப்பான சூழலில், டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.



கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக நடத்தியதற்கு முப்படைகளை பிரதமர் மோடி பாராட்டினார். பின்னர், நாளை (மே 08) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.


நாளை முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement