ஆலோசனைக் கூட்டம்

தேனி, : தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் வீரபாண்டி சித்திரை திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

திருவிழா முன்னேற்பாடு பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது, பாதுகாப்பு வசதிகள், உணவுப்பாதுகாப்புத்துறையினர் தொடர் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

எஸ்.பி., சிவபிரசாத், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement