பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்ததால் பாக்., மீது இந்தியா நடவடிக்கை: காந்தி கொள்ளுப்பேரன்

5


புதுடில்லி: '' பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த காரணத்தினாலேயே அந்நாடு மீது இந்தியா நடவடிக்கை எடுத்தது'', என மஹாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி கூறினார்.


இது தொடர்பாக அவர் கூறியதாவது: மஹாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி கூறியதாவது: நாம் போருக்கு எதிரானவர்கள். ஆனால், ஆயுதப்படைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆயுதப்படைகளுக்கு ஆதரவு வழங்குவதுடன், அவர்களது நடவடிக்கைக்காக பெருமைப்படுகிறோம்.

ஆபரேஷன் சிந்தூர் மூலம், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாலேயே இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பதில் தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த நியாயமும் இல்லை.

Advertisement