மருத்துவமனையாக தரம் உயர்த்த கையெழுத்து இயக்கம்

தொண்டி : தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி கையெழுத்து இயக்கம் துவங்கியது. இது குறித்து தொண்டி அகமது பாய்ஸ் கூறியதாவது:

தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் போதிய வசதிகளில்லை.

எனவே அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொண்டி மக்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement